Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Sonntag, 23. Dezember 2007

என் சுரேஷ்


அன்பினிய கவிதைக்குயிலே,
ராகினி அவர்களுக்கு

உந்தன் குரலில்
நீ படைத்த
கதையும் பாடலும் கவிதைகளும்
என் காதுகள்வழியே இன்று
பயணம் செய்தது!.

அதன் நடைச்சத்தம்
நான் கேட்டேன்

உண்மை சொல்கிறேன்!

நான்
ரசித்தேன்.
சில இடங்களில் சிரித்தேன்
வியந்தேன், அழுதேன்.

யாரோ என்னிடம் என்றோ
இப்படியெல்லாம்
சொல்ல ஆசைப்பட்ட
தாகத்தின் தீயை
உங்களின் படைப்புகள்
சமாதானப்படுத்திற்று

குழந்தைபோல்
ஓர் ஆசை
இதை பதிவுசெய்யும்
நேரம்
உங்களருகே
நானிருந்திருக்ககூடாதா
என்ற நிஜம் காண முடியாத
ஓர் ஆசை
என்னில் மலர்ந்து அழுகிறது

அசைவற்றுபோன ஆசைகள்
பலவற்றில் இதோ இன்னொன்று!

வாழ்த்துக்கள்

பாசமுடன்
என் சுரேஷ்

சென்னை நன்றி சுரேஷ் உங்கள் பாராட்டுக்கு வியந்து ரசித்து அழது கேட்டது பாராட்டுக்கு நன்றி.

Sonntag, 7. Oktober 2007

ஏ.கே.ஆர் அவர்களின் மடல்




ஏ.கே.ஆர் அவர்களின் மடல்



அன்புக் குயில்,ராகினி

மழலைகள்.காம் தளத்தை இம்மாதத்தின் கடந்த 6 நாட்களில் கண்ட 258 வாசகர்ககில் 33 பேர் குயிலின் பாடலையும் கதைகளையும் கேட்டுள்ளனர். பிற படைப்புக்கள் எதனையும் விட இது இரு மடங்குக்குக்கும் மேலாகும்.

குயிலே, உன் குரல் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் மிகவும் பிடிக்கும். உனது குரலில் வெளிப்படும் உனது துன்பங்களையும் உனது உற்றார், உறவினர், நண்பர்கள், சமூகம், மற்றும் உனது தேசம் முழுதும் படும் இன்னல்களையும் அவர்கள் உணர்கின்றனர். அவை தீர்ந்து அமைதி பிறக்க வேண்டுகின்றனர். உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் விளையட்டும்.

--------------
இதை படித்து சில நிமிடம் ஆனந்தக்கண்ணீர் விட்டேன் என்ன எழுதுவது என்று புரியல..இதில் உங்களுக்குதான் பெருமை எங்கோ.. ஒரு ஓரமாய் என்குரலை பதிவு செய்து போட்டேன். அதுக்கு இத்தனை சக்தியா...? நம்ப முடியல என்குரல் லில் அமைதி கிடைக்குமானல் முதல் என் பெற்றோருக்கு முதல் வணக்கம். அடுத்தபடியாக என்குரலை பதிவு செய்து தரும் படி கேட்டு நான் பதிவு செய்து ஆனுப்பி விட்டு பேசாமல் இருந்தேன் ஒரு நாள் என் குரலை கேட்டுபார்க்கவும் என்று மடல் போட்டு என்னை வியக்க வைத்த சூரியன் எப்.எம் அறிவிப்பாளர் யாழ் சுதாகர் அவர்களுக்கும் வணக்கம் அதை கேட்டுவிட்டும் வியந்தேனே...தவிர நான் பெருமை கொள்ளவில்லை . இந்த மடலை படிக்கும் வரை.இப்போ கண்கள் முதல் முதலாக ஆனந்தக்கண்ணீர் கொட்டுகின்றன.வியப்புடன் ஓரு புதிய உணர்வுகளையும். என்னையே எனக்கு அறிமுகம் செய்த உங்களை கண்டுபெருமை அடைகின்றேன். என் தமிழ் நெஞ்சங்களுக்கு என் குரல் நிம்மதியை கொடுக்கும்போது இந்த நிமிடத்தில் இருந்து தமிழ்குயிலாக வாழ்கின்றேன்.
நன்றிஏ.கே.ஆர் உங்கள் அன்புக்கும் உங்கள் ஊக்கத்துக்கும்

Sonntag, 29. Juli 2007

நிலானியின் மடல்.

நிலானியின் மடல்.

வணக்கம் ராகினி உங்கள்.

கவிதை பூங்காவை கண்டு என் கண்கள்.
பரவசம் கொண்டன இத்தனை வடிவம் கொண்ட உங்களை வாழ்த்தாமல் எப்படி இருப்பது.

வாழ்த்தும் திறமை என்னிடம் இருக்கா..?
என்பதை.நான் என்னிடமே..கேள்விகள் கேட்டாலும் உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியல எப்படி உங்களால் இத்தனை வடிங்களை அமைக்க முடிகின்றது. ?
ஆச்சரியம் தான்.என்னை ரசிகை ஆக்கியது உங்கள் எழுத்துக்கள்.
உங்களை பார்க்கும் காலம் வருமா..?வாழ்க உங்கள் தமிழ் வளர்க உங்கள் எழுத்து ஆற்றல்.
என்றும் உங்கள் ரசிகை.
நிலானி

http://www.raaga.com/playerV31/index.asp?pick=23288&mode=3&rand=0.21653144648493888&bhcp=1

Donnerstag, 12. Juli 2007

அம்மாவின் வாழ்த்துமடல்.

விசாலம் அம்மாவின் வாழ்த்துமடல்.
--------


கவிதைக் குயிலே ,என் அன்புக் குயிலே
என் மகளாகத் தெரிகிறாய்
அன்பைச் சொரிகிறாய் ,
மதி எங்குச் சென்றாலும்
என் நினைப்பிலே நீதான்
கூவி குரல் கொடுத்தாலும்
அகமகிழ்வது நான் தான்
இன்னிசைப்பாடும் இனியச் செல்வியே
பண்ணிசைப் பாடும் ஒப்பற்ற்ச் செல்வியே
காதல் கவிதைக்கு உனக்கோர் இடம்
உணர்ச்சியின் வடிவத்தில் ஒர் தனி இடம் ,
மனம் வெடித்து வரும் கவிதை அழகு படம்
மனச்சாந்திக்குத் தேவை மனத்தில் திடம்
சீரும் சிறப்பும் வேண்டி நிற்கின்றேன் உன்க்காக
அவள் திருவடி சரணம் ,,, பொழிவாள் அருள் உனக்காக

ஒம் நமோ பகவத்யை ஸ்ரீ மீராம்பிகாயை ,,,,,,,,,,,,,,,

அன்புடன் விசாலம்

சுவாதி அவர்களின் வாழ்த்துமடல்.

அன்புத் தோழி!
உனக்குத் தெரியுமா
இப்போது என்னை இயக்குவது
இரண்டு உயிர் என்று?
ஒன்று இறைவன் தந்தது.
இரண்டாவது தோழமைகள்
தந்த நட்பு!
என்னுடைய இரண்டாவது உயிரை நான் உன்னிடமும்
பங்கிட்டுக் கொண்டேன்.
இப்போது தான் அது மிகவும் உணர்வுடன் துடிப்பதை உணர்கின்றேன்.
ஏனெனில் அந்த உயிரில் தமிழும் கவிதையும் கலந்திருப்பதால்...
என் இதயம் இயங்கும் கணங்களில் ஒவ்வொரு துடிப்பிலும் உனக்கான வாழ்த்துக்கள் இருக்கும்!!

உங்கள் ஒவ்வொரு எழுத்து ஆற்றலும் என்னை கவர்ந்துள்ளன மேலும் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.


இந்த உயிர்ப்பு மரணமில்லாதது.
நீடூழி வாழ்க!!
அன்புடன்
சுவாதி.

Mittwoch, 4. Juli 2007

பாலமுரளி வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்

----------------
இசையும்..கதையும்,
கவிதைத்திறமும்,
கவியும் கானமும்,
சிந்தனைச் சிதறலும்
கதைகளும் தொடருமாக,
தமிழுக்கு பல வகையில்
படைப்புகளை வழங்கி
கவிதைத் தென்றலாக
கவிதைக் குயிலாக
வலம் வரும்
ஜெர்மனியின் ராகினிக்கு
தனித்துவ முத்திரையுடன்
மேன்மேலும் சிறப்பான
படைப்புகளையும்
வழங்கி பல சிறந்த பாராட்டுகளையும்
பரிசுகளையும் பெறவும்..
வாழ்த்துகிறேன்.
அவரது எழுத்துக்கள் எல்லாம்
புத்தகவடிவில் வந்திட வேண்டு
மென்றுகேட்டுக் கொள்கின்றேன்

அன்புடன்
பாலமுரளி

சென்னை

http://www.raaga.com/playerV31/index.asp?pick=37499&mode=3&rand=0.7001121475492196&bhcp=1

Samstag, 30. Juni 2007

ஜயா ஆர். கிருஷ்ணமாச்சாரி அவர்களின் வாழ்த்துமடல்




கவிதைக் குயிலே புதிய மகளே
இதையே என் வாழ்த்து மடலாக‌
உன் மனதில் எழுதிக் கொள்
தமிழ் மணம் வீசும் உன் மனதில்
இந்த‌த் தமிழ்த் தேனீயும்
ஒரு த‌ந்தை ஸ்தான‌த்தில்இருக்கிறேனே
அத‌னால்
இந்த கவிதைக் குயிலின்
இனிய கானம் உலகமெங்கும்
பரவட்டும் தமிழின் புகழால்
இக் கவிதைக் குயில்
உல‌கமெங்கும் பறக்கட்டும்
ஆண்டவன் அருளட்டும்

தமிழ்த் தேனீ

Montag, 25. Juni 2007

ஜயா ஆர். கிருஷ்ணமாச்சாரி அவர்களின் வாழ்த்துமடல்


வணக்கம் ராகினி அவர்களே. /7/1947 அன்று பிறந்தவன்!
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பது எனது பெயர்
லுகாஸ் டீ வீ ஸ் நிருவனத்தில் 34 ஆண்டுகள்
பணியாற்றிவிட்டு விருப்ப‌ ஓய்வு கொண்ட‌வ‌ன்
த‌மிழின் மேல் த‌ணியாத‌ தாக‌ம் கொண்ட‌ கவிஞ்ஞ‌ன்
தொலைக்காட்ச்சிக‌ளில், ப‌ல‌ த‌மிழ் சினிமாக்க‌ளில்
ந‌டித்துக் கொண்டிருப்ப‌வ‌ன்
14 நாட‌க‌ங்க‌ள் எழுதி இய‌க்கி ப‌ல‌ முத‌ல் ப‌ரிசுக‌ளை
வென்ற‌வ‌ன் என்னுடைய‌ ப்ர‌ப‌ல‌மான‌ தொலைத் தொட‌ர் சித்தீ ராட‌ன் நிறுவ‌ன‌ தொட‌ர் ,அதில் மேனேஜெர் சார‌ங்க‌னாக‌ ந‌டித்த‌வ‌ன் ச்மீப‌த்திய‌ தொட‌ர்கள், கோல‌ங்க‌ள், ஆன‌ந்த‌ம். சாமி , ஆறு , திருட்டுப் ப‌ய‌லே, அது ஒரு க‌னாக் கால‌ம் ம‌ற்றும் ப‌ல‌ த‌மிழ் ப் ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறேன்
ச‌மிப‌த்தில் வெளிவ‌ந்த‌ த‌மிழ்ப் ப‌ட‌ம் சிவாஜீ (இசைக் க‌ருவிக‌ளின் கூடத்தின் மேனேஜெர்)
த‌மிழ் பால் கொண்ட‌ ப‌ற்றின் கார‌ண‌மாக‌
ப‌ல‌ க‌விதைக‌ள் எழுதி வ‌ருகிறேன்
என்னுடைய‌ புனைப் பெய‌ர் த‌மிழ்த்தேனீ
த‌மிழ்ச் ச‌ங்க‌ம் கேள்விப் ப‌ட்டிருக்கிறேன்
த‌மிழ்ச் ச‌ங்க‌ம‌ம் இதுவும் ந‌ன்றாக‌த்தான் இருக்கிற‌து
ம‌ன‌ம் ச‌ங்க‌மித்தால் ம‌த‌ம் ம‌றைந்துவிடும்
ம‌த‌ம் ச‌ங்க‌மித்தால் ஜாதீ ம‌ற‌ந்துவிடும்
த‌மிழ் ச‌ங்க‌மித்தால், ச‌ங்க‌ம‌த்தால்
க‌விதை பிற‌ந்துவிடும்
த‌மிழில் ச‌ங்க‌மிப்போம் , சந்திப்போம்
அன்புட‌ன்
த‌மிழ்த்தேனீ
ஆர்கேசி1947@ ஜிமெயில்.காம் rkc1
...@gmail.com
9840884088 ‍‍ 044‍ 42057923
சென்னை ‍அண்ணா ந‌க‌ர் 600040

கவிக்குயில் சரோஜினிக்கு பிறகு இன்னும் ஒரு கவிதைக்குயில் ?!!!
அந்த கவிக்குயில் போலவே புகழ் அடைவீர்கள் என்று
மகிழ்கிறேன் தமிழ் வளருங்கள் நீங்களும் வளருங்கள்
நன்றி ராகினி அவர்களே
உங்கள் தேன் குரலையும் கேட்டு மகிழ்கிறேன் உங்கள் தமிழறிவையும் கண்டு மகிழ்கிறேன்
அன்புடன் தமிழ்த்தேனீ

நன்றிகள் பல ஜயா உங்கள் வாழ்த்து கிடைத்ததே பெரும் மகிழ்சி ராகினி

கவிதை இசை உங்களை மட்டுமல்ல வாழவைப்பது உண்மையில் எல்லோரையும் வாழவைக்கிறது
உங்கள் பெயரிலேயே ராகினி என்று ராகம் வைத்த உங்கள்
பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள்உங்களுக்கு என் மகள் வயது இருக்கும் என்று நினைக்கிரேன் இசையும் கவிதையும் இந்த 60 வயதிலும் சுறுசுறுப்பாக‌வைத்திருக்கிறதுஉங்கள் இசை,கவிதை மேலும் தமிழ் ஆர்வம் வளரட்டும்,
நீங்களும் அன்னிய மண்ணில் இருந்தாலும்
தமிழை மறக்காமல் இருக்கும் உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும்.

அன்புட‌ன்
ஆர். கிருஷ்ணமாச்சாரி
. எதிர்பாரத. வாழ்து கிடைத்தன எனக்கு ஜயா உங்கள் வாழ்த்து கிடைத்ததே.. எனக்கு மிக பெரிய சொத்து ஜயா..நன்றிகள் பல
அன்புடன்ராகினிhttp://www.raaga.com/playerV31/index.asp?pick=40152&mode=3&rand=0.7040632759716868&bhcp=1