Donnerstag, 17. Juli 2008

அன்பு கவிக்குயில் ராகினி அவர்களுக்கு.

இன்றுதான் உங்கள் வலைப்பூவை கண்டு எனை மறந்து உற்கார்ந்து இந்த மடலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

எதை எப்படி என்ன எழுதுவது என்று சிந்திக்க வைத்தன உங்கள் ஆக்கம் குரல்
இரண்டும் அருமையாக உள்ளது வேலை முடிந்தும் காலை எழுந்தும் உங்கள் குரல் சுப்பிரபாதமாக..நம் இல்லம் முழுதும் இசைக்கின்றது என்ன சக்தி என்பதை உணர முடியவில்லை உங்கள் குரலை ஒரு முறைதான் கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கின்றன.
வாழ்க வளமுடன்

அன்புடன் பிரதீபன்

saudi arapia

நன்றி பிரதீபன் கடவுளுக்கும் என் தாய் தந்தைக்கும் தான் நன்றி சொல்லனும்.

http://www.raaga.com/playerV31/index.asp?pick=7724&mode=3&rand=0.1165844380618673&bhcp=1

கருத்துக்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

kavithaikuyil@mail.com



Montag, 14. Juli 2008


ஓ ராகினி,


அன்பின் அழகைக் கண்டேன்.

தெம்பின் வலிமை கொண்டேன்.

வாழ்வில் புதியது ஒன்றும் இல்லை. வாழ்வும் புரிவதும் இல்லை. எனவே அன்பு, அன்பு, அன்பு மட்டுமே புதியது, பழையது, வலியது.

உம்மைப் பற்றி........ குயிலொன்று பிறந்தது, கவிக்குயிலானது. கவிதைக் குயிலின் பக்கங்கள் காணப் பரவசம். இனிய குரலின், தமிழின் அழகை, அன்பின் தமிழின் இனிய குரலைக் கண்டும், கேட்டும் மகிழ்ந்தேன். அகம் குளிர்ந்தேன். மீண்டும் வந்து வாழ்த்துவேன். என்றும் வளமோடும் புன்னகையோடும் வாழ வாழ்த்துக்கள்.

ரமணி வைத்தியநாதன்.

சென்னை.
உங்கள் முகம் காணவில்லை நான்.
என் குரலை வைத்து உங்கள் அன்பை கொட்டி தந்தீர்கள் தாயே யார் நீங்கள்! உங்கள் அன்பு கிடைக்க நான் என்ன தவம் பெற்றேன்.