Sonntag, 29. Juli 2007

நிலானியின் மடல்.

நிலானியின் மடல்.

வணக்கம் ராகினி உங்கள்.

கவிதை பூங்காவை கண்டு என் கண்கள்.
பரவசம் கொண்டன இத்தனை வடிவம் கொண்ட உங்களை வாழ்த்தாமல் எப்படி இருப்பது.

வாழ்த்தும் திறமை என்னிடம் இருக்கா..?
என்பதை.நான் என்னிடமே..கேள்விகள் கேட்டாலும் உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியல எப்படி உங்களால் இத்தனை வடிங்களை அமைக்க முடிகின்றது. ?
ஆச்சரியம் தான்.என்னை ரசிகை ஆக்கியது உங்கள் எழுத்துக்கள்.
உங்களை பார்க்கும் காலம் வருமா..?வாழ்க உங்கள் தமிழ் வளர்க உங்கள் எழுத்து ஆற்றல்.
என்றும் உங்கள் ரசிகை.
நிலானி

http://www.raaga.com/playerV31/index.asp?pick=23288&mode=3&rand=0.21653144648493888&bhcp=1

Donnerstag, 12. Juli 2007

அம்மாவின் வாழ்த்துமடல்.

விசாலம் அம்மாவின் வாழ்த்துமடல்.
--------


கவிதைக் குயிலே ,என் அன்புக் குயிலே
என் மகளாகத் தெரிகிறாய்
அன்பைச் சொரிகிறாய் ,
மதி எங்குச் சென்றாலும்
என் நினைப்பிலே நீதான்
கூவி குரல் கொடுத்தாலும்
அகமகிழ்வது நான் தான்
இன்னிசைப்பாடும் இனியச் செல்வியே
பண்ணிசைப் பாடும் ஒப்பற்ற்ச் செல்வியே
காதல் கவிதைக்கு உனக்கோர் இடம்
உணர்ச்சியின் வடிவத்தில் ஒர் தனி இடம் ,
மனம் வெடித்து வரும் கவிதை அழகு படம்
மனச்சாந்திக்குத் தேவை மனத்தில் திடம்
சீரும் சிறப்பும் வேண்டி நிற்கின்றேன் உன்க்காக
அவள் திருவடி சரணம் ,,, பொழிவாள் அருள் உனக்காக

ஒம் நமோ பகவத்யை ஸ்ரீ மீராம்பிகாயை ,,,,,,,,,,,,,,,

அன்புடன் விசாலம்

சுவாதி அவர்களின் வாழ்த்துமடல்.

அன்புத் தோழி!
உனக்குத் தெரியுமா
இப்போது என்னை இயக்குவது
இரண்டு உயிர் என்று?
ஒன்று இறைவன் தந்தது.
இரண்டாவது தோழமைகள்
தந்த நட்பு!
என்னுடைய இரண்டாவது உயிரை நான் உன்னிடமும்
பங்கிட்டுக் கொண்டேன்.
இப்போது தான் அது மிகவும் உணர்வுடன் துடிப்பதை உணர்கின்றேன்.
ஏனெனில் அந்த உயிரில் தமிழும் கவிதையும் கலந்திருப்பதால்...
என் இதயம் இயங்கும் கணங்களில் ஒவ்வொரு துடிப்பிலும் உனக்கான வாழ்த்துக்கள் இருக்கும்!!

உங்கள் ஒவ்வொரு எழுத்து ஆற்றலும் என்னை கவர்ந்துள்ளன மேலும் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.


இந்த உயிர்ப்பு மரணமில்லாதது.
நீடூழி வாழ்க!!
அன்புடன்
சுவாதி.

Mittwoch, 4. Juli 2007

பாலமுரளி வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்

----------------
இசையும்..கதையும்,
கவிதைத்திறமும்,
கவியும் கானமும்,
சிந்தனைச் சிதறலும்
கதைகளும் தொடருமாக,
தமிழுக்கு பல வகையில்
படைப்புகளை வழங்கி
கவிதைத் தென்றலாக
கவிதைக் குயிலாக
வலம் வரும்
ஜெர்மனியின் ராகினிக்கு
தனித்துவ முத்திரையுடன்
மேன்மேலும் சிறப்பான
படைப்புகளையும்
வழங்கி பல சிறந்த பாராட்டுகளையும்
பரிசுகளையும் பெறவும்..
வாழ்த்துகிறேன்.
அவரது எழுத்துக்கள் எல்லாம்
புத்தகவடிவில் வந்திட வேண்டு
மென்றுகேட்டுக் கொள்கின்றேன்

அன்புடன்
பாலமுரளி

சென்னை

http://www.raaga.com/playerV31/index.asp?pick=37499&mode=3&rand=0.7001121475492196&bhcp=1