Mittwoch, 21. Januar 2009

லண்டன் தமிழ் வானொலிக்கு அனுப்பப்பட்ட மடல்

லண்டன் தமிழ் வானொலிக்கு அனுப்பப்பட்ட மடல்

From: வினோத் Vinoth
Subject: முதல் வானோலிக்கு முதன் முதலாய்
To: info@firstaudio.info


வணக்கம் முதல் வானோலி.

நான் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வினோத். தங்களின்

நிகழ்ச்சிகளை இணையம் வழி கேட்பேன். அனைத்துமே நன்றாக இருக்கிறது.

அதிலும் கவிதையில் பூத்த பாடல் நிகழ்ச்சி மிகவும் விரும்பி கேட்கும் நிகழ்ச்சி.
நிகழ்சிக்கு இனிமை சேர்ப்பது கவிதைக்குயில் ராகினி அவர்களது குரலாகும்.
தமிழ் வானோலிகள் வளர்ந்து வருவது பெருமையளிக்கிறது.
மேலும் பல வித நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறேன்.

--
நன்றி
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth



-------

kavithaikuyil rahini
Respected sir
I Heard the song Kalaivaniye (divotional)
i enjoyied very much
Please brodcost this song often

Regards

R.Krishnamachary
Alias
Thamizthenee

---------
ஜெர்மனியின் செந்தேன் மலரான கவிதைக் குயில் அவர்கள் பிரதி புதன் கிழமை தோறும் வழங்கும் "கவிதையில் பூத்த பாடல்" நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டு ரசித்து வருகிறேன்.

பாடல்களும் அவற்றிற்கு அறிமுக உரையாக அவர் வழங்கும் கவிதை வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளன.

தங்களது சேவை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

தொடரட்டும் உங்கள் சேவை! பரவட்டும் உலகெங்கும் தமிழோசை!

(ஆ.கி. ராஜகோபாலன்)
மழலைகள்.காம்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு, இந்தியா
-------------

ராஹினி அவர்கள் நிகழ்சி பற்றி

எனக்கு ராகினி அவ்ர்களின் இந்த நிகழ்ச்சியின் ஒலிக்கோப்பு கிடைக்குமா (பதிவிறக்கம் செய்யும்வாறு)

பேரன்புடன்
உங்கள் தீவிர ரசிகன்
சென்னை
மீறான் அன்வர்

Mittwoch, 14. Januar 2009


ராகினி..நீங்கள் தொகுத்து தரும் நிகழ்ச்சி உங்கள் குரலுக்கு கடவுள் தந்த கருணை !என்னை வியக்க வைத்தன உங்கள் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களையும் தரவும் நம்மவர் பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் கவிதை என்னை ரசிக்க வைத்தன

பாடலுக்கு பொருத்தமாக அமைப்பதால்தான் என்னை உங்கள் நிகழ்ச்சிக்கு காத்திருக்க வைக்கின்றது ஒருவாரம் கண்ணதாசன் வரிகள் என நினைக்கின்றேன் அவர் அமைத்த வரிகள் கொண்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட பாடல்கள் நீங்கள் வாரி வழங்கிய கவிதை தொகுத்த அழகு அப்படியே தூக்கி வாரி என்னை மீண்டும் சிறுவனாக மாற்றியது

என்பாராட்டுக்கள் கவிதை குயில் நீங்கள் வரும் போதே..குயிலையும் கூட்டி வரும் அழகே தனி. வாழ்த்துகள்.
இணையத்தளம் ஊடாகதான் கேட்க முடியும்

என் இனிப்பான பொங்கள் வாழ்த்துகள் ராகினி.

சு.சுகிர்தன்.
சிங்கப்பூர்.