Samstag, 14. Februar 2009

அன்பு ராகிணி!

மழலைகள்.காம் என்ற இணையத்தில் குழந்தைகளுக்கு நீங்கள் சொன்ன கதைகளை கேட்டு மகிழ்ந்தேன். தங்களது குரலும், பிரசண்டேஷனும் அருமை. மேன்மேலும் இத்துறையில் தாங்கள் உயர எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
லக்கிலுக்’



-----


26-2-09
பாடல் கவிதை இரண்டும் சேர்ந்து பூத்தது உங்கள் குரலோசையில் இருந்தா?
குரலுக்கு அழகு குயிலா? இல்லை ராகினி என்பேன் உங்களால் இந்த குயில் அழகானது.

உங்கள் நிகழ்ச்சி பதிவு கேட்டேன் இன்றுதான் உங்கள் கவிதையால் பாடல் அழகானது
பாடலும் கவிதையும்! உறக்கத்தில் இருந்தும் இந்த இரவை மறக்கச்செய்தன.

உங்கள் இந்த பணி தொடர வேண்டும் நம்மைப்போல் எத்தனை தமிழர்கள் உங்கள் இசைவான குரலிலும் இசையிலும் வழ காத்திருக்கின்றார்கள் என்னைப்போல்.
வாழ்க உங்கள் கலைப்பணி.

மயிலுச்சாமி
காரைக்குடி








14.2.2009

உங்கள குரலில் குடிகொண்டு இருப்பது காந்தமான குயில்
நிகழ்ச்சி ஒவ்வொன்றும் கேட்க நம்மை எங்கோ அழைத்துச்செல்வது போல்
உணர்வு கவிதையும் பாடல் தெரிவும் சூப்பராக உள்ளது இதற்கு அழகு கொடுப்பது உங்கள் குரல்.வாழ்க வளமுடன்.

நட்புடன் முகம்கானாத உங்கள் ரசிகன்.
மதுரை
பாலமுரளி

Mittwoch, 4. Februar 2009

வானொலிக்கு அனுப்பிய என் இன்னொரு மடல்

ஓ..ராகினி..
உனக்காக மனிதர்கள் காத்திருக்கலாம்..
வானமே காத்திருக்கிருக்கிறது..
உன்..
பொன் கிடைத்தாலும்..
கிட்டாத புதனில்..
தட்டாமல்..கிட்டும்...
கவிதையில் பூத்த பாடலை
உலகெங்கும் கொண்டுசெல்ல..,

படைப்பு தொழில் செய்யும்
இறைவன்...
இசையில் கைதேர்ந்தவன் என்பதை
உன் குரல்வளையைக்கொண்டுதான்
கண்டுகொள்ளவேணடும்..!

இசையால் இதயங்களை..
வசமாக்கும்..
உன் வசந்த பணி...
மும்மூர்த்திகளுக்கு அடுத்ததான
இசைப் பணி..!

செம்மொழிக்கு சொந்தக்காரி..
செர்மானி சென்றாளாம்....
நற்றமிழர் நாவிலெல்லாம்..
செந்ததேனாய் நின்றாளாம்..!

உன் மூச்சு சப்தத்தை..
பதிவித்தால்..கூட..
அதிலும்...
ஒலிக்கக்ககூடும்..
ஏழு ஸ்வரங்களின்
ஏற்ற இறக்கம்..!

வாழ்க..வளர்க..
ராகினியின்..
மொழிப் பணியும்..
இசைப் பணியும்..!



--
தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்

Montag, 2. Februar 2009



வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது.




உங்கள் வானொலி பணி சிறக்கட்டும். தங்கள் தமிழ் உணர்வு..சாதிக்கட்டும்தமிழினிய தோழி கவிகுயில் அவர்களுக்கு..,வணக்கம்..தமிழக தலைநகர்..சென்னையிலிருந்து..தாயுமானவன்...,தென் கோடியிலிருந்து கொண்டுபோன தமிழை..நீங்கள்..வளர்க்கும் விதம்கண்டு..வியுப்புறுகிறேன்.ஆகிரா அவர்கள்..http://www.tamilliterature.net/ எனும் இணைய தளத்தை..எனக்காகஉருவாக்கி கொடுத்திருக்கிறார்.கவிகுயிலிடமிருந்து..கவிதைகளும்..கதைகளும்..எதிர்பார்க்கிறேன்..இதே முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.தேச எல்லைகள் நம்மை பிரித்து வைத்திருந்தாலும்..வெகு எளிதாய்..தமிழ்இணைக்கச்செய்யும்..அதிசயம்..உண்மை.இந்தியாவை பற்றிய உங்கள் கருத்துருக்களை..ஒருதமிழனாய்..ஒருஇந்தியனாய்..வணங்கி நெகிழ்கிறேன்.மற்றவை உங்கள்..பதில் கண்டு..வெங்கட்.தாயுமானவன்--தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்.

வருடும் வார்த்தைகள்..
ஒப்பனையில்லா..உணர்வுகள்..
யதார்த்த ரசம் பூசிய
வாழ்கையின் கண்ணாடிவழி
பிரதிபலிக்கிறது..
உன் கவிபிம்பம்.
மீட்டலின் கட்டுக்குள்
உருகும்..
வீணையின் நரம்புகள் உதிர்க்கும்
நாத குழைவுகளாய்
நடமிடுகிறது..
உன் தமிழ்..!
தாளமிசைத்து ஓடும்
நதியின்..
கண்ணுக்கு தெரியாத
கொலுசுகளின்..
சங்கீத அதிர்வுகளாய்
உன் சொல்லாடல்களின்
பின் புலத்தில்..
இசையின் ராஜாங்கம்.
பசிக்கும் மனங்களுக்கு
படைப்புகளால்..
படையிலிடும்..
கவிதாயினியின்
தமிழ் தொடரட்டும்..