Mittwoch, 4. Februar 2009

வானொலிக்கு அனுப்பிய என் இன்னொரு மடல்

ஓ..ராகினி..
உனக்காக மனிதர்கள் காத்திருக்கலாம்..
வானமே காத்திருக்கிருக்கிறது..
உன்..
பொன் கிடைத்தாலும்..
கிட்டாத புதனில்..
தட்டாமல்..கிட்டும்...
கவிதையில் பூத்த பாடலை
உலகெங்கும் கொண்டுசெல்ல..,

படைப்பு தொழில் செய்யும்
இறைவன்...
இசையில் கைதேர்ந்தவன் என்பதை
உன் குரல்வளையைக்கொண்டுதான்
கண்டுகொள்ளவேணடும்..!

இசையால் இதயங்களை..
வசமாக்கும்..
உன் வசந்த பணி...
மும்மூர்த்திகளுக்கு அடுத்ததான
இசைப் பணி..!

செம்மொழிக்கு சொந்தக்காரி..
செர்மானி சென்றாளாம்....
நற்றமிழர் நாவிலெல்லாம்..
செந்ததேனாய் நின்றாளாம்..!

உன் மூச்சு சப்தத்தை..
பதிவித்தால்..கூட..
அதிலும்...
ஒலிக்கக்ககூடும்..
ஏழு ஸ்வரங்களின்
ஏற்ற இறக்கம்..!

வாழ்க..வளர்க..
ராகினியின்..
மொழிப் பணியும்..
இசைப் பணியும்..!



--
தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்

2 Kommentare:

Balaji hat gesagt…

வணக்கம் கவிதைக்குயிலே,

உங்கள் பெயரை குழுமங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதான் உங்கள் குரலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிக மிக அருமை. கண்ணை மூடிக் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

விடுப்பு நாட்களில் உங்கள் நிகழ்ச்சியை இணையங்களில் கேட்க ஆரம்பித்து விட்டேன்.

மகிழ்ச்சி.

நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
http://balaphotoblog.blogspot.com/

rahini hat gesagt…

nanri