Donnerstag, 24. Dezember 2009

14.1.10
எனது மிக மிக அன்புக்குரிய திருமதி ராகினிக்கு இம்முதியவனின் மிகத் தாழ்ந்த வேண்டுகோள் என்னவென்றால் அடிக்கடி மடல் எழுதாதற்கு என்னை மிகவும் மன்னிக்க வேண்டும். அது எனது ஒரு பொழுதும் சரி செய்யவே முடியாத ஒரு குறை.
உமது நல்த்தைப் பற்றியும் உமது கணவன் குழந்தைகளின் நலத்தைப் பற்றியும் அறிய மிக ஆவ்லுள்ளவனாக் இருக்கிறேன்.

ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன். ராகினியின் பாட்டுக் குரல் எனது காதில் அடிக்கடி ஒலித்துக் கொண்டே யிருக்கும். மேல்லும் சொல்ல வேண்டுமென்றால் அன்புடன் எனக்களிக்கப் பட்ட சிடி (உன) யைப் போட்டு அருமையான் பாட்டுக்களை நீவிர் மிக அருமையான் குரலில் அறிமுகப்படுத்தி போட்டிருப்பதை அப்பொழுதுக் கப்பொழுது கேட்பென்.
கேட்டு கேட்டு பரவசம் அடைவேன்


ராகினியும் அவ்ரது கணவரும் குழைந்தகளும் கடவுளருளுடன் எனறென்றும் குன்றா வளமுடனும் மகிழ்ச்சியுடனும் செல்வத்துடனும் வாழ்க வாழ்கவே.

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் சீனு
இந்தியா

Montag, 21. Dezember 2009

20.12.09

வணக்கம் திருமதி ராகினி அவர்களே
தாங்கள் தொகுத்து வழங்கிய என்றும் இனியவை . இசையின் மடியில் நிகழ்ச்சியை
கேட்டேன்.இசையில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை கண்டு மிகவும்
ஆனந்தம் கொண்டேன்.மிக மிக அருமை...தங்களுக்கு மிகவும்
பிடித்தமான பாடலும் தாங்கள் பாடிய பாடலும் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்
குறிப்பு: நானும் பாடுவேன். இசையில் தங்களின் ரசனை தான் எனக்கும். பழைய பாடல்கள் மிகவும் பிடித்தவை.
நேரமின்மையால் தங்களின் படைப்புகள் அனைத்தும் இன்னும் சரிவர பார்க்க வில்லை.
நன்றி
ராணிமோகன்.

பெயர்....................ராணிமோகன்
தற்போது ............குவைதில்
பூர்வீகம் ............. இந்தியா(பெங்களூர்)
தொழில்...............டிவிஎஸ் ட்ராவல்ஸ்ல்
இசை ,கவிதை இல் ஆர்வம்