Montag, 14. Juli 2008


ஓ ராகினி,


அன்பின் அழகைக் கண்டேன்.

தெம்பின் வலிமை கொண்டேன்.

வாழ்வில் புதியது ஒன்றும் இல்லை. வாழ்வும் புரிவதும் இல்லை. எனவே அன்பு, அன்பு, அன்பு மட்டுமே புதியது, பழையது, வலியது.

உம்மைப் பற்றி........ குயிலொன்று பிறந்தது, கவிக்குயிலானது. கவிதைக் குயிலின் பக்கங்கள் காணப் பரவசம். இனிய குரலின், தமிழின் அழகை, அன்பின் தமிழின் இனிய குரலைக் கண்டும், கேட்டும் மகிழ்ந்தேன். அகம் குளிர்ந்தேன். மீண்டும் வந்து வாழ்த்துவேன். என்றும் வளமோடும் புன்னகையோடும் வாழ வாழ்த்துக்கள்.

ரமணி வைத்தியநாதன்.

சென்னை.
உங்கள் முகம் காணவில்லை நான்.
என் குரலை வைத்து உங்கள் அன்பை கொட்டி தந்தீர்கள் தாயே யார் நீங்கள்! உங்கள் அன்பு கிடைக்க நான் என்ன தவம் பெற்றேன்.

Keine Kommentare: