Montag, 27. April 2009

ரசிக்க வைக்கும் கவிதைகளின் பாசறையே ராகினி பாஸ்கரனேஉஙகள் திருநாமத்தை வானொலியில் கேட்டிருக்கிறோம்நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இதோ உங்கள் சுபாவத்திற்க்குவித்தியாசமான பாடலுடன் பாசறையின் எதிரொலியை கேளுங்கள்.-- Endrum AnbudanCovai
Ravee

எதிரொலியை கேளுங்கள்
பாசறையே ராகினி

கொஞ்சும் குரல்யாளினிராகினி

ராகினி மேடம்...

நேற்றைய ஒலித்தொகுப்புக்கள் கேட்டேன் தாயென்னும் தெய்வங்ன்கள் இரண்டு
கோப்புக்களும் அருமை.

உங்கள் கவிதை தளத்தில் துவக்கத்தில்..

என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள். எழுதுவது
சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.

// என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள்.//

வாஸ்தவமான வார்த்தை கண்டிப்பாக எழுத வேண்டும்.

//எழுதுவது சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.//

நீங்கள் குறிப்பிட்ட படி எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே.?
மலைமேலிருந்து கொட்டும் வெண் அருவி போல் சரளமாக கவிதைகள் உங்கள் கொஞ்சும்
குரலில் கொட்டுகின்றனவே.. பொய் தானே?... எப்படிங்க மேடம் இவ்வளவு
எளிமையாக உங்களால் எழுத முடிகிறது. சில நேரங்களில் கவிதை யென்றாலே ரொம்ப
யோசிக்க வேணும்ப்பா என்று நினைத்திருந்தேன். கவிதையை படித்து ரசிப்பது
விட உங்கள் குரலில் அதுவும் தேர்ந்தெடுத்து சேர்க்கும் இனிமையான
பாடல்களில் கேட்பது என்பது அலாதியானது. குறிப்பாக கண்டசாலா,
தாஸண்ணாவின் பாடல் தொகுப்பு என் மனதை தாளிக்கவைத்து விட்டது. அற்புதம்.
இன்று காலை வேலைக்கு வரும் போது இரண்டு முறை செல் பேசியில் கேட்டேன்.
இது போன்று ந்ம்ம பாலுஜிக்கு ஒரு தொகுப்பு கொடுங்கள். ஏதெனும் இருந்தால்
அனுப்பிவையுங்கள் இந்த அடியேனும் ரசிக்கிறேன்.

நன்றி.

Endrum Anbudan
Covai Ravee
Visit: http://paasaparavaikal.blogspot.com/
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்

Sonntag, 26. April 2009



தேன் சுவைக்கு நா..அழகு
இசைக்கு கவியழகு
கவிக்கு கவிதைக்குயில் அழகு
குயிலுக்கு குரல் அழகு
குரலுக்கு ராகினிதான்.

மேடம் உண்மைசொன்னால்
பெண் அறிவிப்பாளர்கள் எல்லாம் உங்களை போல் திறமை கொண்டவர்களாக இருந்தால்.
வானொலி சிறப்படையும்.
கோவை ரவியின் மடல் பார்த்தேன் உண்மைதான் மேடம்

வாழ்க மேடம் நீங்கள் நலமாக.
கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு.

அன்புடன்.
தேவா.ஜெயந்தி
மதுரை


---

27.4.2009

வசந்தம் என்பது வாழ்வின் அர்த்மாய்
இனிதாய் வாந்தது ரிஆர் ரி தமிழ் வானொலியில்
கதைபேசும் குயில் ஒன்று

இன்பங்களை தந்திட
சொர்க்கம் அழைத்திட
வந்தது வசந்தம் ஒன்று இசையில் நனைத்திட
அடுக்கிய பாடல்கள் கொடுத்த கவிதைகளை வாரி எடுத்தன
உன் குரலில் பிறந்ததால்

வியாழன் மட்டும் போதுமா..?
இல்லை புதனும் போதுமா..?

வேண்டும் வாரம் முழுதும்
உன் குரலோசை.
பாடு குயிலே பாடு
வாழ்க உன் சேவை

சுவீடன்
க.பிரதாபன்
கோவை ரவி



அடடா எவ்வளவு விரைவான பதில் மிக்க மகிழ்ச்சி.. தொகுப்பு உற்சாகமா
இருந்ததா? முழுவது கேட்டுவிட்டீர்களே? ரொம்ப சந்தோசம் சந்தோசம்.

மேடம் நேற்று ஞாயிறு அன்று விடுமுறை தினம் உங்கள் கோப்புக்க்ளை எத்தனை
தடவை கேட்டேன என்றே தெரியவில்லை. அருமை அருமை.

கோவையில் 5 பண்பலை நிலயங்கள் உள்ளன சூரியன் ஒன்று மட்டும் தான்
நிகழ்ச்சிகளை ஒலிபதிவு செய்யும் வகையில் தருகிறார்கள். மேலும் ரெயின்போ
பண்பலையும்.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய வானொலியில் சரோஜ் நாராயாணசாம்
எல்லோருக்கும் பிடித்தவர் எனக்கும் மட்டும் விதிவிலக்கல்ல.

ரெயின்போவில் சராதா ராமானாதன் அவரும் அருமையா தொகுத்து வழங்குபவர்.

மற்ற் நிலையங்களில் பல அறிவிப்பாளர்கள் ஏன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு
இப்படி ஓடுகிறார்கள் என்று பல தடவை நான் கோவப்பட்டது உண்டு. புதிய
அறிவிப்பாளர்களில் ரேடியோ சிட்டி (விஜி) ஹலோ எப் எம் அருணா ஆகீயோர் நல்ல
இனிமையான் குரலில் பேசுகிறார்கள்.

மற்ற் பெண் அறிவிப்பாளர்கள் சுமார் தான் ஓடுவத் அவர்களீன் பாணீயோ என்னவோ
நான் குறை சொல்ல விரும்பவில்லை.

அவர்களையெல்லாம் கேட்டுவிட்டு உங்கள் குரலை கேட்கும் போது உங்கள் இனிமை,
கொஞ்சும் குரல், அனுபவ முதிர்ச்சி நன்றாக தெரிகிறது. ந்ன்றாக நிறுத்தி
அருமையாக இனிமையுடன் உச்சரித்து பேசுவது உங்கள் கலை போலும் அவசரமில்லாம
பேசிகிறீர்கள் அது ஒன்றே உங்கள் நிகழ்ச்சிகளூக்கு பெரும் உதவியாக
இருக்கிறது.

மேலும், என் வீட்டிலுருந்து வேலை செய்யும் கல்லுரிவரை 40 கி,மீ உங்கள்
கோப்புக்களை என் செல் பேசியில் பதிவு செய்து கேட்கிறேன் இன்று காலை கூட
தேன் சிந்துதே வானம் ஒலித்தொகுப்பு கேட்டு கொண்டே வந்தேன் எத்தனை தடவை
கேட்டேன் என்றே தெரியவில்லை அருமை அருமை. வாழ்த்துக்கள்.
உங்களீன் பல தொகுப்புக்கள் மெதுவாக கேட்டு ஒவ்வொன்றாக அனுபுகிறேன். பக்தி
தொகுப்புக்களூம் அருமை.
கோவை ரவி

Mittwoch, 8. April 2009

கோவை ரவி

Hello Rahini madam
ராகினி மேடம்...கவிதையிலும் கலக்குகிறீர்கள்இசையிலும் இசைந்துள்ளீர்கள்ரசிகநெஞ்சங்களீலும் தஞ்சமடந்துள்ளீர்கள்..அடடே உங்கள் க்விதை தளத்தை பார்த்ததுமே எனக்கும் தொற்றிக்கொண்டதே.. இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்ங்க மேடம்..அருமை.. அருமை..வாழ்த்துக்கள்
உங்கள்> வாழ்த்து மடல் தளம் பார்த்தேன் இத்தனி நாள் ஏன் பார்க்க தவறிவிட்டோம்> என்று வருத்தப்படுகிறேன். நான் வேலை செய்யும் கல்லூரியில்> (கோவைதொழில்நுட்ப கல்லூரியில்) பணி புரிகிறேன். ஆகையால் இங்கே தளத்தில்> இருக்கும் பாட்ல்கள் ஆன்லைனில் கேட்க முடியாது. தரவிறக்கம் செய்யும்> வகையில் உங்கள் வானொலி நிகழ்ச்சிகள் தரமுடியுமா இங்கே தரவிறக்கம் செய்து> கேட்கிறேன். மேலும் என் வானொலி பதிவுகளில் சூரியன் பண்பலையில்> அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா, இலங்கை வானொலி> அறிவிப்பாளர்கள் திரு. கே.எஸ்.ராஜா, திரு. அபுதுல் ஹமீது, சென்னையில்> இருக்கும் யாழ் சுதாகர் வரிசையில் இவரும் ஒருவர் அருமையான குரல் கோவையில்> தினமு இரவு வேளையில் தாலாட்டும் தென்றல் தான் இவர். கேட்டு விட்டு அவர்> முகவரிக்கு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் மகிழ்வார். இல்லையென்றால்> http://paasaparavaikal.blogspot.com/2009/04/1.html இந்த் தளத்தில்> உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.>> ஒலிக்கோப்புக்களை அனுப்ப மறவாதீர்கள்>> நன்றி. கோவை ரவி
----
Hello Rahini madam Today i saw ur blog abt Dr.SPB Birthday posting in your site. Greatwriteup i sent my comments in it. Pls c. And i also mentioned in theresome links about Dr.SPB. Sure, U have amazing experience in it. Thxfor your affectin abt our Guruji. All the best. Reply to me.



குயிலே கவிக்குயிலே
கூவுகின்ற வேளைதான் குதூகலமாய் மனதில்
ஆனந்த மழை பொழிகின்றது
நம்நாட்டு மழை பொழிவதால்
புலம்பெயர்விலும் மண்வாசனை
மணக்கின்றது. வாழிய நீ பல்லாண்டு.!
வளர்க உன் கலைப்பயணம்!
பாதுகாக்க உன் இனிப்பான குரலை!
என்குடும்பமே உன் ரசிகர்கள் தாயே.

இப்படிக்கு
கோபால் குடும்பம்.
இத்தாலி

-----

திருமதி ராகினிக்கு!
உங்கள் நிகழ்சிக்காய் தவம் கிடக்கும் !
உங்கள் குரலை கேட்டு இன்பம் அடையும்
பல ரசிகர்களில் நானும் ஒருவர்.

காலத்தின் நேரத்தை கனிய
வைக்கும் குரல் நீ.
கவிதையின் வரிகளை சுவைக்க
வைக்கும் வரிகள் நீ.

வேதனைகளின் கண்ணீரை
கரைந்தோட வைக்கும்
இசைகள் நீ..

வேண்டும் நீ..இப்புவியில் ஆயிரம் காலங்கள்.
வாழ்க நீ. ஒவ்வொரு வானொலியிலும்
வசந்தமாய் நீ.
சுவிஸ் நாட்டில் இருந்து
இன்பரஷன்

17.4.2009



----

13.4.09

வணக்கம் ராகினி,

உங்களின் நலம் மற்றும் குடும்பத்தேன் நலம் அறிய ஆவால்!

நான் உங்களுட இசையும் கதை கவிதைகள் சிறுகதை தொகுப்பை கேட்டேன் மிகவும் அருமை.

தங்களின் வானொலி நிகழ்ச்சியை கேட்டேன் ரசித்தேன். தாங்கள் இது போல் இன்னும் தொடர வழ்த்துக்கள்.
தங்களின் நடப்பு எனக்கு தேவை! இன்னும் பல செய்திகளை உங்களிட மிருந்து தெரிந்து க்கொள்ள
நட்புடன் பாசத்துடன்
அன்புடன்...
குமார்
--------


8.4.09

வேலைத்தளத்தில் இருந்து இந்த மடல் எழுதுகின்றேன் பிழை

கள் இருப்பின் மன்னிக்கவும்.

திருமதி ராகினி அவர்களுக்கு!
உங்கள் நிகழ்சிகள் ஒவ்வொரு வாரமும் கேட்பேன் தவறாமல்
நல்ல பாடல் தெரிவு நல்ல குரல் !!!தரும் கவிதை பாடலோடு இசையும் போது நன்றாக உள்ளது
எல்லோருக்கும் எல்லாம் அமையாது உங்களுக்கு இது கடவுள் அள்ளி வாரித்தெளித்துள்ளார் என்பதுதான் உண்மை
நம்நாட்டில் பல அறிவிப்பாளர்கள் இருந்தார்கள் அன்றைய காலம்
இன்று நீங்கள் தொடர்கின்றீர்கள்

நமக்கு பொருமையாக உள்ளது குரல் இருந்தால் தான் அறிவிப்பு திறம் பட செயல்ப்படும் உங்களிடம் குரலும் பல திறமைகளும் இருப்பதைக்கண்டு வியந்தாலும் சந்தோசம் அடைகின்றேன்.
உங்கள் ரசிகன்
இத்தாலி
ச.சிவா

Samstag, 14. Februar 2009

அன்பு ராகிணி!

மழலைகள்.காம் என்ற இணையத்தில் குழந்தைகளுக்கு நீங்கள் சொன்ன கதைகளை கேட்டு மகிழ்ந்தேன். தங்களது குரலும், பிரசண்டேஷனும் அருமை. மேன்மேலும் இத்துறையில் தாங்கள் உயர எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
லக்கிலுக்’



-----


26-2-09
பாடல் கவிதை இரண்டும் சேர்ந்து பூத்தது உங்கள் குரலோசையில் இருந்தா?
குரலுக்கு அழகு குயிலா? இல்லை ராகினி என்பேன் உங்களால் இந்த குயில் அழகானது.

உங்கள் நிகழ்ச்சி பதிவு கேட்டேன் இன்றுதான் உங்கள் கவிதையால் பாடல் அழகானது
பாடலும் கவிதையும்! உறக்கத்தில் இருந்தும் இந்த இரவை மறக்கச்செய்தன.

உங்கள் இந்த பணி தொடர வேண்டும் நம்மைப்போல் எத்தனை தமிழர்கள் உங்கள் இசைவான குரலிலும் இசையிலும் வழ காத்திருக்கின்றார்கள் என்னைப்போல்.
வாழ்க உங்கள் கலைப்பணி.

மயிலுச்சாமி
காரைக்குடி








14.2.2009

உங்கள குரலில் குடிகொண்டு இருப்பது காந்தமான குயில்
நிகழ்ச்சி ஒவ்வொன்றும் கேட்க நம்மை எங்கோ அழைத்துச்செல்வது போல்
உணர்வு கவிதையும் பாடல் தெரிவும் சூப்பராக உள்ளது இதற்கு அழகு கொடுப்பது உங்கள் குரல்.வாழ்க வளமுடன்.

நட்புடன் முகம்கானாத உங்கள் ரசிகன்.
மதுரை
பாலமுரளி

Mittwoch, 4. Februar 2009

வானொலிக்கு அனுப்பிய என் இன்னொரு மடல்

ஓ..ராகினி..
உனக்காக மனிதர்கள் காத்திருக்கலாம்..
வானமே காத்திருக்கிருக்கிறது..
உன்..
பொன் கிடைத்தாலும்..
கிட்டாத புதனில்..
தட்டாமல்..கிட்டும்...
கவிதையில் பூத்த பாடலை
உலகெங்கும் கொண்டுசெல்ல..,

படைப்பு தொழில் செய்யும்
இறைவன்...
இசையில் கைதேர்ந்தவன் என்பதை
உன் குரல்வளையைக்கொண்டுதான்
கண்டுகொள்ளவேணடும்..!

இசையால் இதயங்களை..
வசமாக்கும்..
உன் வசந்த பணி...
மும்மூர்த்திகளுக்கு அடுத்ததான
இசைப் பணி..!

செம்மொழிக்கு சொந்தக்காரி..
செர்மானி சென்றாளாம்....
நற்றமிழர் நாவிலெல்லாம்..
செந்ததேனாய் நின்றாளாம்..!

உன் மூச்சு சப்தத்தை..
பதிவித்தால்..கூட..
அதிலும்...
ஒலிக்கக்ககூடும்..
ஏழு ஸ்வரங்களின்
ஏற்ற இறக்கம்..!

வாழ்க..வளர்க..
ராகினியின்..
மொழிப் பணியும்..
இசைப் பணியும்..!



--
தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்

Montag, 2. Februar 2009



வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது.




உங்கள் வானொலி பணி சிறக்கட்டும். தங்கள் தமிழ் உணர்வு..சாதிக்கட்டும்தமிழினிய தோழி கவிகுயில் அவர்களுக்கு..,வணக்கம்..தமிழக தலைநகர்..சென்னையிலிருந்து..தாயுமானவன்...,தென் கோடியிலிருந்து கொண்டுபோன தமிழை..நீங்கள்..வளர்க்கும் விதம்கண்டு..வியுப்புறுகிறேன்.ஆகிரா அவர்கள்..http://www.tamilliterature.net/ எனும் இணைய தளத்தை..எனக்காகஉருவாக்கி கொடுத்திருக்கிறார்.கவிகுயிலிடமிருந்து..கவிதைகளும்..கதைகளும்..எதிர்பார்க்கிறேன்..இதே முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.தேச எல்லைகள் நம்மை பிரித்து வைத்திருந்தாலும்..வெகு எளிதாய்..தமிழ்இணைக்கச்செய்யும்..அதிசயம்..உண்மை.இந்தியாவை பற்றிய உங்கள் கருத்துருக்களை..ஒருதமிழனாய்..ஒருஇந்தியனாய்..வணங்கி நெகிழ்கிறேன்.மற்றவை உங்கள்..பதில் கண்டு..வெங்கட்.தாயுமானவன்--தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்.

வருடும் வார்த்தைகள்..
ஒப்பனையில்லா..உணர்வுகள்..
யதார்த்த ரசம் பூசிய
வாழ்கையின் கண்ணாடிவழி
பிரதிபலிக்கிறது..
உன் கவிபிம்பம்.
மீட்டலின் கட்டுக்குள்
உருகும்..
வீணையின் நரம்புகள் உதிர்க்கும்
நாத குழைவுகளாய்
நடமிடுகிறது..
உன் தமிழ்..!
தாளமிசைத்து ஓடும்
நதியின்..
கண்ணுக்கு தெரியாத
கொலுசுகளின்..
சங்கீத அதிர்வுகளாய்
உன் சொல்லாடல்களின்
பின் புலத்தில்..
இசையின் ராஜாங்கம்.
பசிக்கும் மனங்களுக்கு
படைப்புகளால்..
படையிலிடும்..
கவிதாயினியின்
தமிழ் தொடரட்டும்..