Donnerstag, 17. Juli 2008

அன்பு கவிக்குயில் ராகினி அவர்களுக்கு.

இன்றுதான் உங்கள் வலைப்பூவை கண்டு எனை மறந்து உற்கார்ந்து இந்த மடலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

எதை எப்படி என்ன எழுதுவது என்று சிந்திக்க வைத்தன உங்கள் ஆக்கம் குரல்
இரண்டும் அருமையாக உள்ளது வேலை முடிந்தும் காலை எழுந்தும் உங்கள் குரல் சுப்பிரபாதமாக..நம் இல்லம் முழுதும் இசைக்கின்றது என்ன சக்தி என்பதை உணர முடியவில்லை உங்கள் குரலை ஒரு முறைதான் கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கின்றன.
வாழ்க வளமுடன்

அன்புடன் பிரதீபன்

saudi arapia

நன்றி பிரதீபன் கடவுளுக்கும் என் தாய் தந்தைக்கும் தான் நன்றி சொல்லனும்.

http://www.raaga.com/playerV31/index.asp?pick=7724&mode=3&rand=0.1165844380618673&bhcp=1

கருத்துக்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

kavithaikuyil@mail.com



Montag, 14. Juli 2008


ஓ ராகினி,


அன்பின் அழகைக் கண்டேன்.

தெம்பின் வலிமை கொண்டேன்.

வாழ்வில் புதியது ஒன்றும் இல்லை. வாழ்வும் புரிவதும் இல்லை. எனவே அன்பு, அன்பு, அன்பு மட்டுமே புதியது, பழையது, வலியது.

உம்மைப் பற்றி........ குயிலொன்று பிறந்தது, கவிக்குயிலானது. கவிதைக் குயிலின் பக்கங்கள் காணப் பரவசம். இனிய குரலின், தமிழின் அழகை, அன்பின் தமிழின் இனிய குரலைக் கண்டும், கேட்டும் மகிழ்ந்தேன். அகம் குளிர்ந்தேன். மீண்டும் வந்து வாழ்த்துவேன். என்றும் வளமோடும் புன்னகையோடும் வாழ வாழ்த்துக்கள்.

ரமணி வைத்தியநாதன்.

சென்னை.
உங்கள் முகம் காணவில்லை நான்.
என் குரலை வைத்து உங்கள் அன்பை கொட்டி தந்தீர்கள் தாயே யார் நீங்கள்! உங்கள் அன்பு கிடைக்க நான் என்ன தவம் பெற்றேன்.

Dienstag, 20. Mai 2008

ராஜா

வணக்கம்
அன்புக்குயில் ராகினி அவர்களுக்கு.

உங்கள் குரலை வைத்தே நான் உங்களை அன்புக்குயில்
என்று அழைத்தேன்
உங்கள் குரல் என்னை நிம்மதி அடையச்செய்கின்றது.
ஏதோ என் வாழ்வில் தொலைந்து போன ஒன்றை மீட்டி தந்த உணர்வுகள் அடைந்தேன்.
உங்கள் யாழ்பாணத்தமிழ் தான் இதற்கு காரணமா..? இல்லை உங்கள் பேச்சின் அழகா..? இல்லை உங்கள் குயிலின் குரலா..?என்று என்னை திக்கு முக்காட வைத்த போதுதான் உணர்ந்தேன் இல்லை இல்லை இந்த முன்று முக்கனியும் சேர்ந்து தான் உங்களை கடவுள் படைத்தான் என்று தெரிய வந்தன.

ஒருநாள உங்கள் பதிவை கேட்க தவறினால் என்னை நான் இழப்பது போல் உள்ளன இதுதான் உங்கள் அழகு தமிழோடு கொஞ்சி விளையாடும் குரல் மகிமை
ஆண்டவன் என்பவன் உண்மையானால் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவேண்டும்
வாழ்க யாழ் குயில் ராகினி


உங்களை நான் யாழ் குயில் ராகினி என்று அழைத்துக்கொண்டு விடை பெறுகின்றேன்.

வாழ்க வளமுடன்
உங்கள் குரலுக்கும் தமிழுக்கும் அடிமைப்பட்டவன் நான்.
அன்புடன்.


சென்னை
ஆர் ராஜா.
நன்றி ராஜா உங்கள் வாழ்த்து மடலை வாசித்த போது. எனக்கு இந்தப்பாடல் நினைவில் வந்ததது.http://www.raaga.com/playerV31/index.asp?pick=26690&mode=0&rand=0.10738195416075902&bhcp=1

Sonntag, 2. März 2008

Mittwoch, 27. Februar 2008

மு.சிவகரன் அவர்களின் மடல்.

மு.சிவகரன் அவர்களின் மடல்.
--------------------------------



அன்பின் ராகினி அவர்களுக்கு.

உங்கள் அத்தனை வலைப்பூ பகுதியும் என்னை வியக்க வைத்தன சில கவிதைகள் என்னை சிலிர்க்க வைத்தன.

அதோடு உங்கள் குரலில் உலாவரும் நிகழ்சிகளை கேட்டு உண்மையில் நான் சந்தோசம் அடைந்தேன் உங்கள் குரல் உண்மையில் குயில் தான் வேலை முடிந்து வந்ததும் உங்கள் குரலை நம் இல்லத்தில் ஒளிக்க விடுவேன் காரணம் உங்கள் அழகிய தமிழ் உச்சரிப்பின் வடிவம் அதோடு உங்கள் குரல் நோய் தீர்க்கும் மருந்து. என்பேன்.

உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் உங்கள் குயிலின் குரலுக்கும் எந்த குறையும் வராது இறைவனை வேண்டி இந்த மடலை முடிக்கின்றேன்
உங்கள் ரசிகனாக.

வாழ்க தமிழும் உங்கள் குரலும் படைப்புக்களும்.

சென்னையில் இருந்து
மு.சிவகரன்

நன்றி சிவகரன் என் குரல் நோய் தீர்கும் மருந்தாக இருந்தாள் நான் செய்த பாக்கியம் இப்பிறப்பில்.

இதற்கு காரணம் அபிராமியின் வரம் .

http://www.raaga.com/playerV31/index.asp?pick=66596&mode=3&rand=0.10677143185398824&bhcp=1

Sonntag, 23. Dezember 2007

என் சுரேஷ்


அன்பினிய கவிதைக்குயிலே,
ராகினி அவர்களுக்கு

உந்தன் குரலில்
நீ படைத்த
கதையும் பாடலும் கவிதைகளும்
என் காதுகள்வழியே இன்று
பயணம் செய்தது!.

அதன் நடைச்சத்தம்
நான் கேட்டேன்

உண்மை சொல்கிறேன்!

நான்
ரசித்தேன்.
சில இடங்களில் சிரித்தேன்
வியந்தேன், அழுதேன்.

யாரோ என்னிடம் என்றோ
இப்படியெல்லாம்
சொல்ல ஆசைப்பட்ட
தாகத்தின் தீயை
உங்களின் படைப்புகள்
சமாதானப்படுத்திற்று

குழந்தைபோல்
ஓர் ஆசை
இதை பதிவுசெய்யும்
நேரம்
உங்களருகே
நானிருந்திருக்ககூடாதா
என்ற நிஜம் காண முடியாத
ஓர் ஆசை
என்னில் மலர்ந்து அழுகிறது

அசைவற்றுபோன ஆசைகள்
பலவற்றில் இதோ இன்னொன்று!

வாழ்த்துக்கள்

பாசமுடன்
என் சுரேஷ்

சென்னை நன்றி சுரேஷ் உங்கள் பாராட்டுக்கு வியந்து ரசித்து அழது கேட்டது பாராட்டுக்கு நன்றி.

Sonntag, 7. Oktober 2007

ஏ.கே.ஆர் அவர்களின் மடல்




ஏ.கே.ஆர் அவர்களின் மடல்



அன்புக் குயில்,ராகினி

மழலைகள்.காம் தளத்தை இம்மாதத்தின் கடந்த 6 நாட்களில் கண்ட 258 வாசகர்ககில் 33 பேர் குயிலின் பாடலையும் கதைகளையும் கேட்டுள்ளனர். பிற படைப்புக்கள் எதனையும் விட இது இரு மடங்குக்குக்கும் மேலாகும்.

குயிலே, உன் குரல் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் மிகவும் பிடிக்கும். உனது குரலில் வெளிப்படும் உனது துன்பங்களையும் உனது உற்றார், உறவினர், நண்பர்கள், சமூகம், மற்றும் உனது தேசம் முழுதும் படும் இன்னல்களையும் அவர்கள் உணர்கின்றனர். அவை தீர்ந்து அமைதி பிறக்க வேண்டுகின்றனர். உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் விளையட்டும்.

--------------
இதை படித்து சில நிமிடம் ஆனந்தக்கண்ணீர் விட்டேன் என்ன எழுதுவது என்று புரியல..இதில் உங்களுக்குதான் பெருமை எங்கோ.. ஒரு ஓரமாய் என்குரலை பதிவு செய்து போட்டேன். அதுக்கு இத்தனை சக்தியா...? நம்ப முடியல என்குரல் லில் அமைதி கிடைக்குமானல் முதல் என் பெற்றோருக்கு முதல் வணக்கம். அடுத்தபடியாக என்குரலை பதிவு செய்து தரும் படி கேட்டு நான் பதிவு செய்து ஆனுப்பி விட்டு பேசாமல் இருந்தேன் ஒரு நாள் என் குரலை கேட்டுபார்க்கவும் என்று மடல் போட்டு என்னை வியக்க வைத்த சூரியன் எப்.எம் அறிவிப்பாளர் யாழ் சுதாகர் அவர்களுக்கும் வணக்கம் அதை கேட்டுவிட்டும் வியந்தேனே...தவிர நான் பெருமை கொள்ளவில்லை . இந்த மடலை படிக்கும் வரை.இப்போ கண்கள் முதல் முதலாக ஆனந்தக்கண்ணீர் கொட்டுகின்றன.வியப்புடன் ஓரு புதிய உணர்வுகளையும். என்னையே எனக்கு அறிமுகம் செய்த உங்களை கண்டுபெருமை அடைகின்றேன். என் தமிழ் நெஞ்சங்களுக்கு என் குரல் நிம்மதியை கொடுக்கும்போது இந்த நிமிடத்தில் இருந்து தமிழ்குயிலாக வாழ்கின்றேன்.
நன்றிஏ.கே.ஆர் உங்கள் அன்புக்கும் உங்கள் ஊக்கத்துக்கும்