Sonntag, 26. April 2009

கோவை ரவி



அடடா எவ்வளவு விரைவான பதில் மிக்க மகிழ்ச்சி.. தொகுப்பு உற்சாகமா
இருந்ததா? முழுவது கேட்டுவிட்டீர்களே? ரொம்ப சந்தோசம் சந்தோசம்.

மேடம் நேற்று ஞாயிறு அன்று விடுமுறை தினம் உங்கள் கோப்புக்க்ளை எத்தனை
தடவை கேட்டேன என்றே தெரியவில்லை. அருமை அருமை.

கோவையில் 5 பண்பலை நிலயங்கள் உள்ளன சூரியன் ஒன்று மட்டும் தான்
நிகழ்ச்சிகளை ஒலிபதிவு செய்யும் வகையில் தருகிறார்கள். மேலும் ரெயின்போ
பண்பலையும்.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய வானொலியில் சரோஜ் நாராயாணசாம்
எல்லோருக்கும் பிடித்தவர் எனக்கும் மட்டும் விதிவிலக்கல்ல.

ரெயின்போவில் சராதா ராமானாதன் அவரும் அருமையா தொகுத்து வழங்குபவர்.

மற்ற் நிலையங்களில் பல அறிவிப்பாளர்கள் ஏன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு
இப்படி ஓடுகிறார்கள் என்று பல தடவை நான் கோவப்பட்டது உண்டு. புதிய
அறிவிப்பாளர்களில் ரேடியோ சிட்டி (விஜி) ஹலோ எப் எம் அருணா ஆகீயோர் நல்ல
இனிமையான் குரலில் பேசுகிறார்கள்.

மற்ற் பெண் அறிவிப்பாளர்கள் சுமார் தான் ஓடுவத் அவர்களீன் பாணீயோ என்னவோ
நான் குறை சொல்ல விரும்பவில்லை.

அவர்களையெல்லாம் கேட்டுவிட்டு உங்கள் குரலை கேட்கும் போது உங்கள் இனிமை,
கொஞ்சும் குரல், அனுபவ முதிர்ச்சி நன்றாக தெரிகிறது. ந்ன்றாக நிறுத்தி
அருமையாக இனிமையுடன் உச்சரித்து பேசுவது உங்கள் கலை போலும் அவசரமில்லாம
பேசிகிறீர்கள் அது ஒன்றே உங்கள் நிகழ்ச்சிகளூக்கு பெரும் உதவியாக
இருக்கிறது.

மேலும், என் வீட்டிலுருந்து வேலை செய்யும் கல்லுரிவரை 40 கி,மீ உங்கள்
கோப்புக்களை என் செல் பேசியில் பதிவு செய்து கேட்கிறேன் இன்று காலை கூட
தேன் சிந்துதே வானம் ஒலித்தொகுப்பு கேட்டு கொண்டே வந்தேன் எத்தனை தடவை
கேட்டேன் என்றே தெரியவில்லை அருமை அருமை. வாழ்த்துக்கள்.
உங்களீன் பல தொகுப்புக்கள் மெதுவாக கேட்டு ஒவ்வொன்றாக அனுபுகிறேன். பக்தி
தொகுப்புக்களூம் அருமை.
கோவை ரவி

Keine Kommentare: